தமிழில் வரவேற்பு இல்லை என்றாலும் 100 கோடி வசூலில் 'குபேரா' | 'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் |
ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், விஷால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ரத்னம்'. விஷாலின் அடுத்த படமாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிளான 'டோன்ட் வொர்ரி' பாடல் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது.
தனது கடைசி படமான 'மார்க் ஆண்டனி' படம் வெற்றிகரமாக ஒடி ரூ.100 கோடி வசூலைக் கடந்ததால் இந்த 'ரத்னம்' படத்தையும் அது போல பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று விஷால் நினைக்கிறாராம்.
அரசியலிலும் ஒரு காலை அவ்வப்போது எடுத்து வைக்கும் விஷால், 'ரத்னம்' படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்று தகவல். அவரது ரசிகர்களை ஒன்று திரட்டி மாநாடு போல நடத்த முடிவெடுத்துள்ளாராம். அடுத்த மாதம் திருச்சியில் அந்த மாநாடும், அதில் இசை வெளியீடும் நடக்கும் எனத் தெரிகிறது.
லோக்சபா தேர்தல் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் விஷால் தெரிவிக்க வாய்ப்புள்ளது.