ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஆண்டிலிருந்து இதன் படப்பிடிப்பு பல கட்டமாக இடைவெளி விட்டு நடைபெற்று வருகிறது. இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த வருடத்தில் இத்திரைப்படம் திரைக்கு வரும் என தெரிவிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் ராம் சரண் மூன்று வில்லன்கள் உடன் மோதுகிறார் என கூறப்படுகிறது. அதன்படி, எஸ்.ஜே. சூர்யா முதன்மை வில்லனாக நடிக்கிறார். இவர் அல்லாமல் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா இருவரும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.