புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
லியோ திரைப்படத்தில் "சாக்லேட் காபி... சாக்லேட் காபி...." என்ற குரலுக்கு சொந்தக்காரர். சில காட்சிகளிலே வந்தாலும், ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தவர். சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கிய இவர் 'பத்தல பத்தல' உள்ளிட்ட பல பாடல்களின் நடன இயக்குனர். சாண்டி மாஸ்டர் என அழைக்கப்படும் இவர் தற்போது நடிகராகவும் கால் பதித்துள்ளார்.
தினமலர் வாசகர்களுக்காக கூறியது: பிறந்து வளர்ந்தது சென்னை. 3 வயதில் நடனம் மீது ஒரு ஈர்ப்பு. ஒரு நாள் நடன இயக்குனர் கலா மாஸ்டரிடம் குழு நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் நீண்ட நாட்களாக அவரிடம் நடன பயிற்சி எடுத்து வந்தேன். மானாட மயிலாட தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்றேன். பிருந்தா மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக வேலை செய்தேன்.
2014ல் 'ஆ' திரைப்படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானேன். பின் பல படங்களில் நடன இயக்கம் செய்தேன். காலாவில் ரஜினிக்கு நடன இயக்குனராக பணிபுரிந்ததை வாழ்நாளில் மறக்க மாட்டேன். கமல், கார்த்தி, சிம்பு என முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்கம் செய்தேன்.
வாலு, கெத்து, சண்டக்கோழி 2, பரியேறும் பெருமாள், கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். 2015ல் 'இவனுக்கு தண்ணீல கண்டம்' படத்தில் துணை கதாபாத்திரம், 2021ல் சந்துரு இயக்கத்தில் 3:33 படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் நடித்தேன். இது ஓடிடி தளத்தில் வெளியானது. இன்டிபென்டட் கலைஞர்களின் ஆல்பம் பாடல்களுக்கும் நடன இயக்கம் செய்து நடித்தும் உள்ளேன்.
என்னை இன்றுவரை ஓட வைப்பது என் மனைவி சில்வியாவின் அன்பு தான். நடிகர் பிரபுதேவா எனது ரோல் மாடல். லியோவில் என் நடிப்பை பார்த்து இயக்குனர்கள் ரஞ்சித், லிங்குசாமி, பிரதீப் ரங்கநாதன் பாராட்டினர். சாக்லேட் காபி வசனத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அடைய செய்தது.
விஜய் உடன் நடித்த அனுபவம் அருமை. நாம் தயங்கினாலும், நம்மை உற்சாகப்படுத்தி நன்றாக நடிக்க வைப்பார். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தாலும், நடனம் இயக்குவதை விடமாட்டேன். இளைஞர்கள் கடினமாக உழையுங்கள். கடின உழைப்பும், விடாமுயற்சியுமே முன்னேற்றும், என்றார்.