தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
தமிழில் அமரகாவியம் படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். தொடர்ந்து ஒருநாள் கூத்து, இன்று நேற்று நாளை, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த மியா ஜார்ஜ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மலையாள திரையுலகில் சக நடிகைகளை தனது நட்பு வட்டாரத்தில் அதிக அளவில் வைத்திருக்கும் மியா ஜார்ஜ் தொடர்ந்து அவர்களுடன் விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நட்பை பலப்படுத்த தவறுவதில்லை.
அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை நடிகை பாவனாவுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார் மியா ஜார்ஜ். பாவனாவுடன் தானும் தனது மகனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மியா ஜார்ஜ்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த இந்த கெட் டுகெதர், தீபாவளி அன்று மாலை அமைந்தது. ஒவ்வொரு தீபாவளியிலும் நினைத்துப் பார்க்கக் கூடிய மாலை பொழுதாக இது அமைந்து விட்டது. பாவனா நம்மை சுற்றி இருக்கும் போது ஒரு நொடி கூட 'டல்' ஆக இருக்காது. அன்பையும் சிரிப்பையும் பரப்புங்கள் டியர்” என்று கூறியுள்ளார். டாக்டர் லவ், ஹலோ நமஸ்தே உள்ளிட்ட சில படங்களில் பாவனாவும் மியா ஜார்ஜும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.