லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் நேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் எஸ்ஜே சூர்யாவை, “இந்நாளின் திரை உலக நடிகவேள்', வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்,” எனப் பாராட்டியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு நேற்றே பதிலளித்து, “மிகச் சிறந்த பாராட்டைத் தந்த ரஜினிக்கு நன்றி..உங்கள் அன்பில், மழையில் நானும் குழுவினரும் நனைந்துவிட்டோம்,” என்று சூர்யா குறிப்பிட்டிருந்தார்.
படத்தைப் பார்த்த போது ரஜினிகாந்த்துடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட போட்டோவையும், தனியாக எடுத்த போட்டோவையும் இன்று பகிர்ந்து, “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஒரு குறிஞ்சி மலர் - தலைவரிடமிருந்து ஸ்டேன்மென்ட்”, மற்றும் தலைவர் ரஜினிகாந்த் சாருடன் ஒரு குறிஞ்சி தருணம்… உங்கள் அன்பான கடிதத்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம், மிக்க நன்றி சார். ,” என இன்று மீண்டும் நன்றியைத் தெரிவித்துள்ளார் எஸ்ஜே சூர்யா.