லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 19ம் தேதி வெளியான படம் 'லியோ'. தீபாவளியன்று இப்படம் 25வது நாளைத் தொட்டது.
தீபாவளிக்காக வெளியான படங்களுடன் போட்டி போட்டு 'லியோ' படமும் தீபாவளி விடுமுறை நாட்களில் பல தியேட்டர்களில் ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ மொத்த வசூல் பற்றிய அறிவிப்பு கடைசியாக அக்டோபர் 31ம் தேதியன்று வெளியானது. அப்போது 540 கோடி வசூலை உலகம் முழுவதும் பெற்றதாக அறிவித்தார்கள். அதன்பின் மொத்த வசூல் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் வெளிநாடுகளில் இப்படம் 24 மில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 201 கோடி ரூபாய், வசூலித்ததை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவு செய்தது.
இன்னமும் படம் ஓடிக் கொண்டிருப்பதால் கடந்த 15 நாட்களில் எப்படியும் 60 கோடி வசூலித்து 600 கோடியைக் கடந்திருக்கலாம். நாளை இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஒருவேளை அதற்கு முன்னதாக இதுவரையிலான மொத்த தியேட்டர் வசூலைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவும் வாய்ப்புள்ளது.