தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் விஜய் நடிக்கிறார் . ‛லியோ' படம் வெளியாகும் முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. ஆனால் லியோ வெளியான பிறகு தான் இந்த படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்தது. லியோ படம் வெளியான 5 நாட்களுக்கு பின் இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இன்று(அக்., 24) வெளியிட்டனர்.
படத்தின் பூஜை வீடியோ உடன் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விபரமும் தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என்பது ஏற்கனவே வெளியான தகவல்கள் தான் என்றாலும் தற்போது அது உறுதியாகி உள்ளது.
அந்தவகையில் இந்த படத்தில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என மல்டி ஸ்டார்களும், அஜ்மல், ஜெயராம், சினேகா, லைலா, யோகிபாபு, விடிவி கணேஷ் மற்றும் வெங்கட்பிரபு கேங்கான பிரேம்ஜி அமரன், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
மேலும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா, கேமராமேனாக சித்தார்த், எடிட்டராக வெங்கட் ராஜீன், ஸ்டன்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றுவதாக அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளனர்.
சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது தென் ஆப்ரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏகப்பட்ட கலைஞர்கள் நடிப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.




