அதர்வா ஜோடியான நிமிஷா சஜயன் | 'ரசவாதி'யில் சித்த வைத்தியர் கேரக்டரை உருவாக்கியது ஏன்? : சாந்தகுமார் பேட்டி | படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் |
கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவழி நடிகை மற்றும் பாடகி நோரா பதேகி. இசை ஆல்பங்கள் மூலம் புகழ்பெற்ற இவர் 'ரோர்: டைகர் ஆப் தி சுந்தர்பான்ஸ்' என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமாகி அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார், 'டெம்பர்' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தெலுங்கிலும் ஏராளமான படத்தில் நடித்துள்ளார். ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். 'பிக்பாஸ்' உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பங்கேற்றுள்ளார்.
நோரா பதேகி தற்போது தெலுங்கில் தயாராகும் வருண் தேஜின் 14வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஏற்கெனவே மீனாட்சி சவுத்ரி நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். நோரா இன்னொரு நாயகி ஆகியுள்ளார். கருணா குமார் இயக்கவுள்ள இந்த படத்தை வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் மோகன் செருக்குறி மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் கதை விசாகப்பட்டினத்தில் 1960களின் காலகட்ட பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.