பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளம், தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் படம் கிங் ஆப் கோதா. இதில் துல்கர் சல்மான், ஜஸ்வர்யா லஷ்மி, பிரசன்னா, ரித்திகா சிங், சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பீஜாய் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தமிழில் கலாட்டாகாரன், மலையாளத்தில் கலாபக்காரா ஆகிய பெயர்களில் வருகின்ற ஜூலை 28ம் தேதி துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது என அறிவித்துள்ளனர். மேலும், துல்கர் சல்மான், ரித்திகா சிங் இணைந்து நடனம் ஆடும் இந்த பாடலை பென்னி டாலர், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளதாக கூறப்படுகிறது.