ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
கமல்ஹாசன், ஸ்ரீதேவி, தீபா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'மீண்டும் கோகிலா. ஒரு நடுத்தர குடும்பத்து கணவன், மனைவியை விட்டு பிரிந்து ஒரு நடிகையுடன் சுற்றுவதும், பின்னர் தன்னை உணர்ந்து மனைவியுடன் சேர்வதும்தான் கதை, ரொமாண்டிக் காமெடி வகை படம்.
இந்த படத்தை முதலில் இயக்கியது மகேந்திரன். தீபா நடித்த நடிகை கேரக்டரில் நடித்தது பாலிவுட் நடிகை ரேகா. ஆனால் என்ன காரணத்தாலோ 20 சதவிகித படப்பிடிப்பும், ஒரு பாடலும் எடுத்து முடித்த நிலையில் மகேந்திரன் படத்தை விட்டு விலகினார். அதை தொடர்ந்து ரேகாவும் விலகினார். பின்னர் படத்தை இயக்குமாறு ஜி.என்.ரங்கராஜனை கமல் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அவர் இயக்கினார். ரேகாவிற்கு பதில் தீபா நடித்தார்.
படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும், பாடல்களும் ஒரு காரணமாக இருந்தது. சின்னஞ்சிறு வயதில், ராதா ராதா நீ எங்கே, ஹேய் ஓராயிரம், பொன்னான மேனி பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஸ்ரீதேவிக்கு ஏராளமான விருதுகள் கிடைத்தது.