நடிகர் அஜித் பற்றி சிலாகித்த மஞ்சு வாரியர் | சூரிக்கு அக்காவான ஸ்வாசிகா | ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன: அடுத்த படம் குறித்து அட்லி சூசகம் | கணேஷ் ஆச்சார்யா படத்தின் டிரைலரை வெளியிட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : 'மீண்டும் கோகிலா' படத்திலிருந்து விலகிய மகேந்திரன், ரேகா | தமிழுக்கு வந்த துளு நடிகை | தமிழில் வெளியாகும் 'க்ரேவன் தி ஹண்டர்' | பிளாஷ்பேக் : முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பி.யூ.சின்னப்பா | ஆஸ்கர் போட்டியில் நுழைந்த இந்தியர்கள் உருவாக்கிய படம் | ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான், 'லாபட்டா லேடீஸ்' |
மகேந்திரா பிலிம் பேக்டரி சார்பில் மகேந்திரா தயாரிப்பில் உருவாகும் படம் 'இரவின் விழிகள்'. சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் துளு மொழியில் வெளியான 'பங்காரா' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சிறந்த துளு மொழி படமாக தேசிய விருது பெற்றது.
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏஎம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சிக்கல் ராஜேஷ் கூறும்போது “இந்தப் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. ஒருவன் சைக்கோ ஆவதற்கு அவனுக்கென தனிப்பட்ட ஒரு காரணம் இருக்கும். இங்கே அப்படி ஒருவன் சைக்கோ ஆவதற்கு இந்த சமுதாயத்தின் மீதான ஒரு கோபமும் ஒரு பொது விஷயமும் காரணமாக இருக்கிறது. அது என்ன என்கிற வித்தியாசமான கதை அம்சத்துடன் இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக படம் தயாராகி வருகிறது
பெரும்பாலான படப்பிடிப்பு ஏற்காடு அருகில் உள்ள வெள்ளிமலை பகுதியில் நடைபெற்றுள்ளது. மேலும் புதுச்சேரி, மரக்காணம் அதை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் திருப்பூரிலும் இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெற்றுள்ளது. தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன” என்றார்.