சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தெலுங்குத் திரையுலகில் சீனியர் நட்சத்திர தம்பதியர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. 'புதுமைப்பெண்' படத்தில் அறிமுகமான டாக்டர் ராஜசேகர், அந்தக் காலத்தில் வெளியான தெலுங்கு டப்பிங் படமான 'இதுதான்டா போலீஸ்' படம் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது மனைவியான ஜீவிதா, தமிழில் 'உறவைக் காத்த கிளி' படம் மூலம் அறிமுகமானார். தமிழில் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர், தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். ராஜசேகர், ஜீவிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களது மகள்களான ஷிவானி, ஷிவாத்மிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகின்றனர்.
சிரஞ்சீவியின் மைத்துனரும், தயாரிப்பாளரும், அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் தொடர்ந்து அவதூறு வழக்கு ஒன்றில் ராஜசேகர், ஜீவிதா தம்பதியருக்கு நம்பள்ளி, 17வது கூடுதல் தலைமை மெட்ரோபலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஒரு ஆண்டு தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு சிரஞ்சீவி மீதும், சிரஞ்சீவி ரத்த வங்கி மீதும் ரத்தத்தை விற்பதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால் அவர்கள் மீது அல்லு அரவிந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராஜசேகர், ஜீவிதா ஆகியோர் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டிய அவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது.




