''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பரத்பாலா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் 'மரியான்'. ரஹ்மான் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்த காலத்திலேயே பரத்பாலாவும் அவரும் நெருங்கிய நண்பர்கள். ரஹ்மானை இந்திய அளவில் புகழ் பெற வைத்த 'வந்தே மாதரம்' ஆல்பத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பரத்பாலா. 1998ல் வெளிவந்த அந்த ஆல்பம் விற்பனையில் சாதனை படைத்தது.
பரத்பாலா இயக்கிய முதல் படமான 'மரியான்' வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் கவனத்தை ஈர்த்த ஒரு படமாக அமைந்தது. தனுஷின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்களில் இதுவும் சேரும். ரஹ்மான் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. “நெஞ்சே எழு, இன்னும் கொஞ்ச நேரம், சோனபரீயா, எங்க போன ராசா” ஆகிய பாடல்களுடன் ரஹ்மான் இசையில் யுவன்ஷங்கர் ராஜா பாடிய 'கடல் ராசா நான்' பாடலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.
இன்றுடன் படம் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. அப்போதைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து ஏஆர் ரஹ்மான், “மரியான் 10 ஆண்டுகள், இன்றிரவு 9 மணிக்கு லைவ் நிகழ்ச்சி செய்வோமா, எண்ணங்களைப் பகிர்ந்து, கொண்டாடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஹ்மானின் அழைப்புக்கு படத்தின் இயக்குனர் பரத்பாலா, நாயகி பார்வதி வரவேற்பு தெரிவித்துள்ளனர். “ஆவலுடன் காத்திருக்கிறேன் சார், பனிமலரின் அன்பிற்கு எல்லா தூரத்தையும் மிஞ்சும் ஒரு மொழியை வழங்கியதற்கு நன்றி,” என பார்வதி குறிப்பிட்டுள்ளார்.