நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் | தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை | பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி | எனக்கான பட வாய்ப்புகள் குறையவில்லை : சோனியா அகர்வால் | நடிகை கனகலதா காலமானார் | மே 10ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது 'ஆர்ஆர்ஆர்' |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று தமிழகத்தில் இரண்டாவது வாரத்தில் 450 திரைகளில் ஓடி வருகிறது.
தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் நாயக்குடு என்ற பெயரில் டப்பிங் செய்து ஜூலை 14ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கு பதிப்பில் சுரேஷ் புரொடக்சன்ஸ் மற்றும் ஏசியன் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டிரைலரை நேற்று நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோர் வெளியிட்டனர்.