ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் மலையாளி பிரம் இந்தியா என்கிற படம் கடந்த மே-1ல் வெளியானது. ஏற்கனவே பிரித்திவிராஜை வைத்து ஜன கன மன படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அந்த அளவிற்கு வரவேற்பையும் வசூலையும் பெற தவறி உள்ளது. அதேசமயம் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் பிரபல மலையாள கதாசிரியர் நிஷாத் கோயா என்பவர் சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “2021ல் ஜோஷி இயக்கத்தில் ஜெயசூர்யா நடிப்பதற்காக இந்த கதையை அவர்களிடம் சொன்னேன். ஆனால் அந்த படம் நடக்கவில்லை. அதே சமயம் இதில் ஆர்வமாக இருந்த ஜெயசூர்யா, டிஜோ ஜோஸ் ஆண்டனியிடம் இந்த படத்தின் கதையை கூறுமாறு என்னிடம் சொன்னார். ஆனால் நான் கதை கூறியதும் தனக்கு பிடிக்கவில்லை என்று டிஜோ ஜோஸ் கூறிவிட்டார். அதன் பிறகு சில காலம் கழித்து சலார் படப்பிடிப்பில் இருந்த பிரித்விராஜை நேரில் சந்தித்து இந்த கதை பற்றி கூறினேன்.
அப்போது அவர் இதே போன்று ஒரு கதையைத்தான் டிஜோ ஜோஸ் ஆண்டனி படமாக்கி வருகிறார் என்ற தகவலை சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து நான் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கு வாட்ஸ் அப்பில் விளக்கம் கேட்டு செய்தி அனுப்பினேன். ஆனால் இந்தியா பாகிஸ்தான் என்கிற விஷயத்தை தவிர இதில் எதுவுமே உங்கள் கதை இல்லை. நான் புதிதாக பண்ணியிருக்கிறேன் என்று அவர் கூறினார்.
ஆனால் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அதில் நான் எழுதிய காட்சிகள் படமாகி இருப்பதை பார்க்க முடிந்தது. அதனால் தான் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு இந்த படத்தின் கதை என்னுடையது என்பது போன்று நான் ஒரு பதிவிட்டேன். அதன் பிறகு தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால் அதை நீக்கி விட்டேன்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் தனக்கான இழப்பீடு வேண்டும் என்றோ அல்லது வேறு எந்த விஷயங்கள் பற்றியோ அவர் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.