பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நாயகன் படத்தின் வெற்றிக்கு பின் 37 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‛தக் லைப்'. இதன் அறிமுக டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இவற்றில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம் இந்த படத்தில் சிம்புவும் நடிப்பதாக தகவல் வந்த நிலையில் படக்குழுவினர் அதை அறிவிக்கவில்லை. ஆனால் டில்லியில் நடந்து வரும் இதன் படப்பிடிப்பில் சிம்பு பங்கேற்ற புகைப்படங்கள் லீக்காகி வைரலாகின.
இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக தக் லைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவரின் அறிமுக டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எல்லையை காக்கும் பேட்ரோல் வண்டியில் புழுதி பறக்க காரில் வரும் சிம்பு கையில் துப்பாக்கியை வைத்து யாரையோ சுடுவது போன்று வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி டிரெண்ட் ஆனது.
மேலும் இந்தாண்டு இறுதியில் தக் லைப் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.




