பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் | என் ஓட்டுக்கு விஜய்க்கு தான் - ஆல்யா மானசா பேட்டி | காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது | சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர் | ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு | வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் : கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் |
இந்திய அளவிலேயே ஒரு படத்திற்கு ஐந்தாம் பாகம் உருவாகிறது என்றால் அது மலையாளத்தில் மம்முட்டி நடித்த சிபிஐ டைரி குறிப்பு படத்திற்குத்தான். இதுவரை இந்தப்படத்திற்கு நான்கு பாகங்கள் வெளியாகிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து இதன் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகை ஷோபனா விசிட் அடித்துள்ளார். மேலும் மம்முட்டியுடன் அங்கே எடுத்துக்கொண்ட செல்பியை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள ஷோபனா “ஒரு ரசிகையாக எங்கள் கேப்டனை பார்க்க வந்தேன்” என குறிப்பிட்டுள்ளார். எண்பது தொண்ணூறுகளில் மம்முட்டி-ஷோபனா இருவரும் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.