பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் | 2025 சங்கராந்தி - வெளியான மூன்று தெலுங்குப் படங்களும் 100 கோடி வசூல் |
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல எடிட்டராக வலம் வந்த மகேஷ் நாராயணன் கமலின் விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் இணைந்து நடித்த டேக் ஆப் திரைப்படம் மூலம் இயக்குனர் ஆக மாறினார். பிறகு தொடர்ந்து பஹத் பாசிலை வைத்து மாலிக், சி யூ சூன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
தமிழில் முதன்முறையாக கமல் நடிக்கும் படம் ஒன்றை இவர் இயக்கப் போவதாக கடந்த வருடமும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் மலையாளத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 16 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார் மகேஷ் நாராயணன். இதில் அவரது முதல் பட கதாநாயகர்களான பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவருமே முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, “தமிழில் நிச்சயமாக கமல் படம் மூலம் தான் என்ட்ரி கொடுப்பேன். ஆனால் அதன் உருவாக்கத்திற்கு இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும். அந்த கதையை இப்போது நான் இயக்கி வரும் மோகன்லால், மம்முட்டி படத்திற்காக பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் நான் எழுதிய புதிய கதை. இந்த படத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை. படத்தில் முழு நீள கதாபாத்திரத்தில் தான் இருக்கிறார். அது மட்டுமல்ல, என் படத்தில் நடித்தவர்கள் என்பதால் பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவரையும் ஏதோ கருவேப்பிலை போல பயன்படுத்த மாட்டேன். அவர்களுக்கும் இந்த படத்தில் வலுவான கதாபாத்திரங்கள் இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.