உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்கிக் கொண்டிருந்தாலும், அல்ல அர்ஜுனுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் 4ந் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த வழக்கில் அல்லு அர்ஜுனை குற்றவாளியாக்கிய அரசு, கடந்த 13ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நடந்து வரும் நம்பள்ளி கோர்ட்டு நேற்று அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஒரு லட்சம் ரூபாய் பிணயத் தொகையுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், கோர்ட்டு அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.