பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்ப் படமான 'முகமூடி' படம் மூலம் நடிகையான அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தெலுங்கில் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். ஹிந்தியில் 2016ல் வெளியான 'மொகஞ்சதாரோ' படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்தது. அதன்பின் பூஜா நடித்த ஹிந்திப் படமான 'ஹவுஸ்புல்' படம் மட்டுமே ஓடியது. அந்தப் படத்தில் அக்ஷய்குமார், ரித்தேஷ் தேஷ்முக், பாபி தியோல், கிரித்தி சனோன், கிரித்தி கர்பந்தா ஆகியோரும் நடித்திருந்தனர். மூன்று கதாநாயகிகளில் ஒருவராகத்தான் பூஜா நடித்திருந்தார்.
தொடர்ந்து பூஜா நடித்த ஹிந்திப் படங்களான “ராதேஷ்யாம், சர்க்கஸ்” ஆகியவை படுதோல்விப் படங்களாக அமைந்தது. இந்நிலையில் சல்மான் கான் ஜோடியாக பூஜா நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கிசிகி பாய் கிசிகி ஜான்' படமும் தோல்விப் படங்களின் வரிசையில் சேர்ந்துள்ளது. சல்மான் படம் என்றாலே இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைத் தொடும். ஆனால், இந்தப் படம் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் 100 கோடியைத் தொட்டுள்ளது. இருப்பினும் வசூல் ரீதியாக படம் மிகப் பெரும் நஷ்டத்தைத்தான் தரும் என்கிறார்கள்.