புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
கடந்த 2020ம் ஆண்டு, இந்தியா, சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு வழியாக சுமார் 200 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அருகில் உள்ள கிராமங்களை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் எதிர்த்து போராடினார்கள். இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 45க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் இறந்தனர். ஆயுதங்கள் எதுவும் இன்றி வெறும் கைகலப்பு, கல்வீசி தாக்கி நடந்த இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர்களான சிஷ் அரூர், ராகுல் சிங் ஆகியோர் இணைந்து எழுதிய 'இண்டியாஸ் மோஸ்ட் பியர்லஸ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புத்தகத்தை தழுவி திரைப்படமாக தயாரிக்கிறார்கள். இதற்கான உரிமையை இயக்குநர் அபூர்வா லாகியா பெற்றுள்ளார். அவரே இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இவர், 'ஏக் அஜ்னபி', 'மிஷன் இஸ்தான்புல்', 'ஜன்ஜீர்' உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். பான் இந்தியா முறையில் உருவாக இருக்கும் இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.