லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
பாலிவுட் நடிகை கிரிசன் பெரிரா. இவர் கடந்த 1ம் தேதி வெப் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக விமானத்தில் சார்ஜா சென்றார். அப்போது அவரிடம் போதை பொருள் இருந்ததாக போலீசார் அவரை கைது செய்து சார்ஜா சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கிரிசனின் தாய் பிரமிளா மும்பை போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தன் மகள் போதை பொருள் கடத்தவில்லை என்றும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில் ஆண்டனி பால் என்பவர் தனது நண்பர் ராஜேஷ் மூலம் நடிகை கிரிசனிடம் போதை பொருள் பார்சலை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. இதை தொடர்ந்து இருவரையும் செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நடிகையை பழிவாங்க அவரை போதை வழக்கில் சிக்க வைத்ததை ஒப்புக் கொண்டனர்.
கிரிசன் பெரிராவை போதைப்பொருள் கடத்தலில் சிக்கவைத்து அவருக்கு தெரியாமல் போதைப்பொருளை மறைத்து கொடுத்து அனுப்பியது பற்றி சார்ஜாவில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிரிசன் பெரிரா, சார்ஜா ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து விரைவில் மும்பைக்கு வருகிறார்.