படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் 'மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதன் 100-வது நிகழ்ச்சி, வருகிற 30-ந் தேதி ஒலிபரப்பாகிறது. இதையொட்டி, 'மன் கி பாத்-100' என்ற ஒருநாள் தேசிய மாநாடு நேற்று டில்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இதனை தொடங்கி வைத்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், இந்தி நடிகர் அமீர்கான், நடிகை ரவீணா டாண்டன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 100 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர்கான் பேசியதாவது: 'மன் கி பாத்' நிகழ்ச்சி, ஒரு தலைவர், பொதுமக்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கான முக்கியமான சாதனம். பிரதமர் மோடியை மக்கள் நம்புகிறார்கள். மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்துகிறார். ஒரு தலைவர், தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை மக்களிடம் தெரிவித்து, அவர்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் முக்கியம். இது எந்த தலைவருக்கும் அடிப்படை தேவை. இந்நிகழ்ச்சி, மக்கள் இயக்கமாக நடக்கிறது. மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை ரவீணா டாண்டன் பேசியதாவது: 'மன் கி பாத்' மூலம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் பிரதமர் தொட்டு வருகிறார். கண்டுகொள்ளப்படாத நாயகர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறார். கட்டுப்பாடுகளை உடைத்து பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கிறார்கள். என்றார்.