டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
பாலிவுட் நடிகை கிரிசன் பெரிரா. இவர் கடந்த 1ம் தேதி வெப் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக விமானத்தில் சார்ஜா சென்றார். அப்போது அவரிடம் போதை பொருள் இருந்ததாக போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது அவர் சார்ஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கிரிசனின் தாய் பிரமிளா மும்பை போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன் மகள் போதை பொருள் கடத்தவில்லை என்றும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தார்.
இந்த விசாரணையில் ஆண்டனி பால் என்பவர் தனது நண்பர் ராஜேஷ் மூலம் நடிகை கிரிசனிடம் போதை பொருள் பார்சலை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆண்டனி பால், ராஜேஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் நடிகையை பழிவாங்க அவரை போதை வழக்கில் சிக்க வைத்ததை ஒப்புக் கொண்டனர். இதனால் மும்பை போலீசார் தற்போது சார்ஜா சிறையில் இருக்கும் நடிகையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.