பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
அஜித், தமன்னா நடித்து வெளிவந்த 'வீரம்' படத்தை ஹிந்தியில் சல்மான் கான், பூஜா ஹெக்டே நடித்து 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என கடந்த வாரம் வெளியிட்டார்கள். ஹிந்திக்காக படத்தை 'கமர்ஷியல் கரம் மசாலா' படமாக மாற்றியிருந்தார்கள். அதனால், படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகமாக வந்தன.
படம் வெளியான முதல் நாளில் சுமார் 15 கோடியை மட்டுமே படம் வசூலித்துள்ளது. ஆனால், பி அன்ட் சி சென்டர்களில் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் சுமார் 53 கோடி வரை வசூலித்துள்ளது. இதனால், கடந்த வார இறுதியில் மொத்தமாக 68 கோடியை வசூலித்துள்ளது.
படம் எப்படியும் 100 கோடி வசூலைக் கடந்துவிடும் என்கிறார்கள். ஆனால், அந்த வசூல் சல்மானின் படத்திற்குப் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது. இப்போதெல்லாம் 500 கோடி என்பது சர்வசாதாரணமாக வந்துள்ள நிலையில் ஒரு அவுட்டேட்டட் கதையை சல்மான் ரீமேக் செய்தது தவறு என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தைக் கொடுக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.