சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

வடிவேல் பாலாஜி இறந்து ஒரு வருடமாகி விட்ட நிலையில் அவரது நினைவு தினத்தையொட்டி விஜய் டிவி பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
விஜய் டிவியின் முன்னணி காமெடியனாக வலம் வந்த வடிவேல் பாலாஜி சென்ற வருடம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவர் மரணமடைந்து ஒருவருடம் ஆகி விட்ட நிலையில், குக் வித் கோமாளி புகழ் அவரை பற்றி மிகவும் எமோஷ்னலானா பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில், "மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா. வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். பலவற்றை எனக்கு கற்று கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள், இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள். நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். மிஸ் யூ மாமா" என அவர் கூறி உள்ளார்.




