பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
விஜே மணிமேகலை புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கிய மணிமேகலை சன் மியூசிக்கில் இருந்த போது மிகவும் பிரபலமானார். ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் சிறிது காலம் திரையில் தோன்றாமல் இருந்தார். அதன் பின் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு மீண்டும் திரை வெளிச்சத்தில் உலா வருகிறார். மணிமேகலை தற்போது தனது கனவு காரான பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், ஹுசைன் மணிமேகலையின் சொந்த பி.எம்.டபிள்யூ. சொந்த முயற்சியில் கிடைத்த வெற்றி என கூறியுள்ளார். இதனையடுத்து மணிமேகலைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
விஜய் டிவி பிரபலங்கள் தொடர்ச்சியாக கார்களை வாங்கி வருகின்றன. புகழ், ஈரோடு மகேஷ், ஷிவானி, ஜாக்குலின், தாடி பாலாஜி ஆகியோரை தொடர்ந்து மணிமேகலையும் இப்போது புதிதாக பி.எம்.டபிள்யூ காரை வாங்கி உள்ளார்.