பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடரில் கதாநாயகி சஹானாவாக நடித்தவர் ஹிமா பிந்து. ஆந்திராவை சேர்ந்த ஹிமா பிந்துவின் குடும்பத்தில், அவரது தாத்தா காலத்திலிருந்தே குடும்பத்தினர் பலரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகின்றனர். இதன் காரணமாக ஹிமா பிந்துவுக்கு நடிப்பில் ஆர்வம் வர டான்ஸ், ஆக்டிங் கற்றுக்கொண்டார். பேஷன் டிசைனிங் படித்துக் கொண்டிருந்த போது அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. ஆனால், பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்த சொல்லி அறிவுரை கூறினர். எனவே, பெற்றோருக்காக அந்த வாய்ப்பை விட்டுவிட்டார்.
தமிழ் சின்னத்திரையில் 'இதயத்தை திருடாதே' என்ற தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமான ஹிமா பிந்து, தமிழ் ரசிகர்களின் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்துள்ளார். சின்னத்திரை ரசிகர்களிடையே 'இதயத்தை திருடாதே' சிவா - சஹானா ஜோடி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த தொடரின் முதல் சீசன் வெற்றிகரமாக 600 எபிசோடுகளை கடந்து முடிவுற்றது. இருப்பினும் ரசிகர்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இதயத்தை திருடாதே சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் 'ஐஆர்8' என்ற படத்தில் ஹீரோயினாக ஹிமா பிந்து நடித்திருந்தார். இருப்பினும் அவர் சீரியலில் தான் டாப் ஹீரோயினாக பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிமாவின் ஆசைப்படியே அவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் தேடி வர ஆரம்பிந்துள்ளன. விரைவில் வெள்ளித்திரையிலும் டாப் பட்டியலில் சேர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.