பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இதயத்தை திருடாதே தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. புதுப்புது நிகழ்ச்சிகளையும், மெகா தொடர்களையும் வெளியிட்டு சின்னத்திரை ரசிகர்களை மெதுவாக தன் பக்கம் கவர்ந்து வருகிறது கலர்ஸ் தமிழ் டிவி. இந்நிலையில் அந்த தொலைக்காட்சியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "இதயத்தை திருடாதே" என்ற சீரியலின் இரண்டாம் பாகத்தை தற்போது வெளியிட்டுள்ளது.
முதல் சீசனில் கதாநாயகன் சிவா ஜெயிலுக்கு செல்வது போல் முடிக்கப்பட்டிருக்கும். தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தின் கதைக்களம் 6 வருடம் கழித்து நடைபெறுவது போல் காட்டப்பட்டுள்ளது. கதையில் சிவா பெரிய டான் ஆகி விடுகிறார். நாயகி சஹானாவுக்கு ஐஸ்வர்யா என்ற குழந்தை உள்ளது. சஹானா மிகப்பெரிய தொழிலதிபர் ஆகிறார். சஹானா தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு அவளது தந்தையை பற்றி எதுவுமே கூறாமல் வளர்க்கிறார்.
சிவா பெரிய டான் ஆனது எப்படி?. தன் தாயை மீறி தந்தையைப் பற்றி தெரிந்து கொள்வாரா ஐஸ்வர்யா? இவர்கள் மூவரும் திரும்பவும் சேர்வார்களா? என்ற கேள்விகளுடன் இதயத்தை திருடாதே சீசன் 2 கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் ஹிட்டான ஒரு சீரியலுக்கு பெரும்பாலும் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது கடினம். அப்படியே ஒரு சில சீரியல்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருந்தாலும் அவை பார்வையாளர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே, தற்போது வெளியாகவுள்ள இதயத்தை திருடாதே சீசன் 2 ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறுமா?