நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன் | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! | ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு | நடிகர் சங்க புதுக்கட்டடம்: விஜயகாந்த் பெயர் வைக்க சிக்கலா? |
பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ். சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் குணசித்ர கேரக்டரில் நடித்திருக்கிறார். சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் ரச்சிதா மஹாலக்ஷ்மிக்கு அப்பாவாக நடித்து பிரபலமானார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு அப்பாவாகவும், ஈரமான ரோஜாவே தொடரிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் வெங்கடேஷ் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். எந்த வித உடல்நல பிரச்சினையும் இல்லாமல் இருந்த வெங்கடேஷின் திடீர் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 55 வயதான அவருக்கு பாமா என்ற மனைவியும், நிவேதா என்ற மகளும், தேவானந்த் என்ற மகனும் உள்ளனர்.