'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி. திமுகவில் சேர்ந்த இவர் அந்த கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு கங்கா கவுரி என்ற படத்தில் நடித்தார். அந்த படம் போதிய வரவேற்பை பெறாததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்தக்கட்டமாக சின்னத்திரை நடிகராகி விட்டார். இன்று (பிப் 22) முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் ஆசிரியர் கேரக்டரில் நடிக்கிறார். இந்த தொடரின் நாயகி தேவயானி. ஒரு பிரபல சமையற்கலை நிபுணருக்கும், வீட்டு சமையலில் கைதேர்ந்த தேவயானிக்கும் இடையிலான காதல் தான் கதை களம். திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.