'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரையில் நீண்டகாலமாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் அஞ்சனா. இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்ட அஞ்சனாவிற்கு ஒரு குழந்தை உள்ளது. பல தொகுப்பாளினிகள் சினிமாவிலும் ஆளுமை செலுத்தி வரும் நிலையில் அஞ்சனா தொடர்ந்து சின்னத்திரையிலேயே அங்கம் வகித்து வருகிறார். ஆனபோதும் சினிமா நடிகைகளுக்கு இணையாக தனது சோசியல் மீடியாவில் அவ்வப்போது விதவிதமாக எடுக்கப்பட்ட போட்டோஷுட்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஒரு ரசிகர், நீண்டகாலமாக சின்னத்திரை பிரபலமாக இருந்தும் உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லையே? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அஞ்சனா பதிலளிக்கையில், ''எனக்கு நடிப்பில் அத்தனை ஆர்வம் இல்லை. அதனால் தான் சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. மேலும், சினிமா -சின்னத்திரை என்றெல்லாம் நான் பிரித்து பார்ப்பதுமில்லை. எனக்கான இடம் இதுதான் என்பதால் அதில் எனது பணியை சிறப்பாக செய்வதில் மட்டுமே என்னுடைய கவனம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது என்றார்.