தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னட சினிமாவில் நடித்து வருகிறார். கன்னட சினிமாவை உலுக்கிய போதை மருந்து வழங்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகி படங்களில் நடித்து வருகிறார். வழக்கும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை அதிகமாக இருப்பதாக கர்நாடக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்துள்ளார். மகளிர் ஆணைய தலைவியை சந்தித்து நேரில் புகார் மனு கொடுத்த அவர் பின்னர் நிருபர்களிடம் பேசும்போது :
“கன்னட திரையுலகில் பெண் கலைஞர்களுக்கான தனிப்பட்ட சுதந்திரமான அமைப்பு இல்லை. எனது அறக்கட்டளையான சஞ்சனா கல்ராணி அறக்கட்டளையில் இருந்து, தனியாக சுதந்திரமான அமைப்பை உருவாக்குவோம். இதனால் திரைத்துறையில் நுழையும் புதுமுகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மேலும், 'சாண்டல்வுட் வுமன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்' என்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் கன்னட திரைத்துறையில் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த முடியும்” என்றார்.