சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
கே.பாலசந்தரின் 'மன்மத லீலை' படத்தில் அறிமுகமானவர் பிரவீனா. இந்தப் படத்தில் ஹேமா சவுத்ரி, ஜெயப்ரதா, ஒய்.விஜயா, ரீனா உள்பட பலர் நடித்தார்கள். அவர்களில் ஒருவராக பிரவீனா நடித்தார். படத்தின் டைட்டில் கார்டில்கூட அவர் பெயர் இடம் பெறவில்லை. அதன்பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்தார். இதில் மலையாளத்தில் மட்டும் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
ஆனால் அவருக்கு தான் அறிமுகமான தமிழில் ஒரு படத்திலாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனாலும் கிடைக்கவில்லை, மாந்தோப்பு கிளியே, ஜம்பு. அடுக்குமல்லி, பசி படங்களில் சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டரில் நடித்தார். கடைசியாக பாக்யராஜ் இயக்கிய 'பாமா ருக்மணி' படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இன்னொரு ஹீரோயின் ராதிகா.
அதன் பிறகு பாக்யராஜையே திருமணம் செய்து கொண்ட அவர், திருமணமான இரண்டே ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது 25வது வயதில் நிறைவேறாத கனவுடன் மரணம் அடைந்தார்.