மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் |
கோன் பனைகா குரோர்பதி, பிக் பாஸ் உள்ளிட்ட பல கேம் ஷோக்கள், தொடர்கள் வேறு மொழியில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறது. முதன் முறையாக தமிழில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி இந்தியாவின் முக்கிய மொழிகளில் ரீமேக் ஆகிறது. அந்த நிகழ்ச்சி குத் வித் கோமாளி.
விஜய் டி.விவியல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக இது மாறி உள்ளது. சாதாரண சமையல் நிகழ்ச்சியை சுவாரஸ்மான நிகழ்ச்சியாக மாற்றி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். முதல் சீசனை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் 2வது சீசன் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சினிமாவுக்கும் செல்கிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியின் அடுத்த பெருமை.
இந்த நிகழ்ச்சி தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான புரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஸ்டார் டி.வி நெட்ஒர்க்கின் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி சேனல்களிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.