'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சித்தி 2, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் நேஹா மேனன். குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கிய நேஹா, பல சீரியல்களில் நடித்துள்ளார். நாரதன், ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன், தனது குடும்பத்தில் நல்ல செய்தி ஒன்றை எதிர்பார்ப்பதாகவும், சரியான நேரத்தில் அதை வெளியிட போவதாகவும் நேஹா தனது இன்ஸ்ட்ராகிராமில் குறிப்பிட்டிருந்தார். இதை நேஹாவின் திருமண செய்தி என்று கருதி பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேஹா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது அம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும். என் அம்மாவை விட நானே தயாயான மாதிரி அதிகம் உணர்கிறேன். தங்கையை வளர்க்க ஆர்வமாக இருக்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.
19 வயதாகும் நேஹா அக்கா ஆகியிருப்பது குறித்து பலர் வாழ்த்தினாலும், அதை கிண்டல் செய்து வருகிறவர்களும் இருக்கிறார்கள். இதுகுறித்து நேஹா கூறும்போது "அர்த்தமற்ற குப்பைகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஒரு நல்ல மகிழ்ச்சியான தருணத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்" என தெரிவித்துள்ளார்.