செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதன் 6-வது சீசன் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த சீசனில் முதன்முறையாக கிராமத்து இசை கலைஞர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் கணவன் - மனைவி.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே இவர்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தன. குறிப்பாக சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது இந்த தம்பதியரை வெகுவாக பாராட்டினர்.
கணவன் மனைவியாக இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் இருவரும் சளைத்தவர்கள் அல்ல என பலமுறை நிரூபித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு செந்தில், ரக்ஷிதா, மாளவிகா, ஸ்ரீகாந்த், அனிருத், சக்தி ஆகியோர் தேர்வாகி இருந்தனர்.
இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இறுதிப்போட்டியில் ஒவ்வொரு போட்டியாளர்களும் இரண்டு பாடல்களை பாடி அசத்தினர். செந்தில் கருப்பசாமி பாடலையும், தாண்டவக்கோனே பாடலையும் பாடி அசத்தினார்.
மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் செந்தில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான வீடும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.
இரண்டாவது இடத்தை ரக்ஷிதா பிடித்தார். அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பரிசாக வழங்கப்பட்டது. 3வது இடத்தை மாளவிகா பெற்றார். அவருக்கு ரூ.5 லட்சம் ரொக்க பரிசு அளிக்கப்பட்டது.
இப்போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டி வரை வந்த ஸ்ரீகாந்த்க்கும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.