விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
வட இந்தியாவில் புகழ்பெற்ற கலர்ஸ் டி.வி தற்போது தமிழிலும் கால் பதித்திருக்கிறது. கலர்புல்லான பல தொடர்களுடன் களம் இறங்கி இருக்கிறது. நாளை முதல் புதிய தொடர்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. கலர்ஸ் இந்தி டிவியில் ஒளிபரப்பான நாகினி தொடர் தமிழில் முன்னணி சேனலில் ஒளிபரப்பானது. இந்த தொடரின் 2ம் பாகமும் முதல் பாகத்தை ஒளிபரப்பிய சேனலே ஒளிபரப்புவதாக இருந்தது. ஆனால் தற்போது கலர்ஸ் சேனல் தமிழில் தொடங்கப்பட்டுள்ளதால் இரண்டாம் பாகத்தை தனது தமிழ் சேனில் ஒளிபரப்புகிறது கலர்ஸ் டி.வி.
நாகினி 2 இந்தி கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்து விட்டது. தற்போது நாகினி 3க்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் நாகினி 2வை கலர்ஸ் தமிழ் ஒளிபரப்புகிறது. 137 எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில் மவுனிராய், அர்ஜுன் பிஜ்லானி, அதா கான், சுதா சந்திரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தனுஸ்ரீதாஸ் குப்தா இதன் கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.