ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் மாலை 5.30 மணிக்கு சந்தைக்கு புதிதாக வந்துள்ள பொருட்களை அறிமுகப்படுத்தும் ``அங்காடித் தெரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் பகுதியான ஆடை பகுதியில், சிறியவர் முதல் பெரியவர் வரை அணியக் கூடிய விதவிதமான உயர்ரக ஆடை வகைகளை படம் பிடித்துக் காட்டுகிறார்கள்.
அடுத்து பெண்கள் விரும்பும் அணிகலன் பகுதியில், தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்களின் தொகுப்பை காணலாம். மேலும் வீட்டு உபயோகப் பொருட்கள் பகுதியில் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் இடம் பிடிக்கிறது. இறுதியாக "அழகுக்கு அழகு" பகுதியில் பெண்களுக்கு தேவையான அழகுக் குறிப்புகளும், சருமப் பராமரிப்பு முறைகளும் அதனால் ஏற்படக்கூடிய பலன்களும் தரப்படுகின்றன. நிகழ்ச்சியை மதுலிமா தொகுத்து வழங்குகிறார்.