டாக்சிக் குறித்து கியாரா அத்வானி பகிர்ந்த தகவல் | ஜனநாயகன் எப்போது ரிலீஸ் : வினோத் கொடுத்த பதில் | ‛வேட்டுவம்' படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த சோபிதா துலிபாலா | ‛சிஸ்டம்' பட வெற்றிக்காக மும்பை மகாலட்சுமி கோவிலுக்கு சென்று நன்றி செலுத்திய ஜோதிகா | ஜெயராமின் காலைத் தொட்டு வணங்கிய தோனியின் மனைவி | ஷாருக்கான், கஜோல் உள்ளிட்ட பல பிரபலங்களை அன்பாலோ செய்த கரண் ஜோஹர் | ஸ்வேதா மேனன் உள்ளிட்ட மூவர் மீது முதலமைச்சரிடம் புகார் கொடுத்த திரிஷ்யம் நடிகை | தமிழ் சினிமாவின் 11வது 300 கோடி படமாக 'கருப்பு' : மற்ற படங்களின் லிஸ்ட் இதோ... | ஐதராபாத்தில் விரைவில் ஐமேக்ஸ் தியேட்டர் | சில வருடங்களில் புஷ்பா 3 : நடிகர் ஜெகபதி பாபு தகவல் |

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் அறக்கட்டளை தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்காக இலவச தங்கும் விடுதி ஒன்றை நடத்துவதோடு, அவர்களை விளையாட்டு மற்றும் கலைத்துறையில் வளர்த்து வருகிறார். தனது தாயாருக்கும், ராகவேந்திரருக்கும் கோவில் கட்டி உள்ளார்.
இந்த நிலையில் 'மாற்றம்' என்ற புதிய அமைப்பு ஒன்றை தொடங்க உள்ளார். இது வருகிற மே 1ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அமைப்பை ராகவா லாரன்ஸால் உதவி பெற்று படித்து முன்னேறி இப்போது நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருக்கும் இளைஞர்கள் இணைந்து இதனை நடத்த இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது “உதவியால் வென்றவர்கள் மற்றவர்களுக்கு உதவ வருகிறார்கள்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.




