'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? | நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | கே.ஜி.எப் தயாரிப்பாளருடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன் | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி | 'பூ' சசி படத்தில் லப்பர் பந்து சுவாசிகா | 'தக் லைப்' கூடவே வரும் மூன்று படங்கள் : தியேட்டர்கள் கிடைக்குமா ? |
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பேய் சீரியஸ் ஆக 'காஞ்சனா' 4ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை கோல்ட் மைன்ஸ் நிறுவனத்தின் மூலம் மணி ஷா தயாரிக்கின்றார்.
இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான நோரா வெக்தே நடிக்கின்றார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கே.ஜி.எப் ராமசந்திரா ராஜூ இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இப்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈ.சி.ஆரில் பிரமாண்ட அரங்கம் அமைத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இத்தனை நாட்கள் தாமதமான ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பை வருகின்ற நாட்களில் பாண்டிச்சேரியில் தொடங்கவுள்ளனர். இதற்காக காஞ்சனா 4ம் பாகத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு லாரன்ஸ் தற்காலிகமாக இடைவெளி விட்டுள்ளார். பென்ஸ் படத்தின் ஒரு சில கட்ட படப்பிடிப்புகளுக்கு பின்னர் காஞ்சனா 4 படப்பிடிப்பை துவங்குகிறார் என்கிறார்கள்.