என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் டிரண்ட் இப்போது தொடங்கினாலும் ஹாலிவுட்டில் பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்த நிலையில், கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டர்ஸ்டெல்லர்' படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை நினைவுகூறும் வகையில் வருகிற, செப்டம்பர் மாதம் 27ம் தேதி படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக பாராமவுன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
2014ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் மேத்யூவ் மெக்கானாகே, அன்னி ஹாத்வே, ஜெஸிகா சாஸ்டைன், பில் இர்வின் உட்பட பலர் நடித்திருந்தனர். பூமி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலைக்கு ஆளாகிவிட, புதிய கிரகத்தைத் தேடிப் போகும் சாகச விண்வெளிப் பயணம்தான் இந்தப் படத்தின் கதை. நம்பமுடியாத கதையாக இருந்தாலும் அதை நம்பும்படியாக இயக்கி இருந்தார் கிறிஸ்டோபர் நோலன். சயின்ஸ் பிக்சன் படங்களில் முதல் 5 இடத்திற்குள் இந்த படம் வந்தது. புதிய மெருகூட்டலுடன் படம் வெளியாவதாக தெரிகிறது.