காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு | எந்த காலத்திலும் அரசியலுக்கு 'நோ': அஜித் பேட்டி | நடிகர் சங்கத்தில்தான் திருமணம் செய்வேன் : விஷால் மீண்டும் உறுதி | ரெட்ரோ : இரண்டே நாளில் 'நன்றி முடிவுரை' எழுதிய கார்த்திக் சுப்பராஜ் | பிளாஷ்பேக்: சினிமா தயாரிக்க மோட்டார் நிறுவனத்தை விற்ற தயாரிப்பாளர் |
சின்னத்திரை சேனல்களில் மனதில் உறுதி வேண்டும், வைராக்கியம், ஆபீஸ், தேவதை, பைரவி, பாசமலர், கைராசி குடும்பம் உள்பட ஏராளமான நெடுந்தொடர்களில் லீடு ரோல்களில் நடித்தவர் ஜீவிதா.
இவர் ஜெயம்ரவி -ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். அதைத் தொடர்ந்து பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் யுவன் மயில்சாமி நாயகனாக நடித்துள்ள என்று தணியும் என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் தனது வேடம் குறித்து ஜீவிதா கூறும்போது, என்று தணியும் படம் காதல் கதையில் உருவாகியிருக்கிறது. என்னதான், ஜாதி, மத பிரிவினைகள் குறைந்து கொண்டு வந்தபோதும், வேறு ஜாதியினரை காதலிக்கும்போது அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் காதலிப்பவர்கள் கருணை கொலை செய்யப்படும் கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு கதாபாத்திரத்தில்தான் இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன்.
இந்த படத்தின் நாயகன் யுவன் மயில்சாமியும், நானும் அக்கா-தம்பியாக நடிக்கிறோம். அவர் ஒரு பெண்ணை காதலிப்பார். அதேபோல் நானும் ஒருவரை காதலிப்பேன். நான் தாழ்த்தப்பட்ட ஜாதி இளைஞனை காதலிப்பதால் என்னை கொன்று விடுவார்கள். பல சீரியல்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் நான், இந்த படத்தில் மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். எனக்கு மூன்று பாடல்களும் உள்ளது. இந்த படத்தை மார்ச் 4-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று கூறும் ஜீவிதா, இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ராஜேஷ். இவர் யுவன் மயில்சாமிக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்க வந்தவர். அவரது நடிப்பைப்பார்த்து விட்டு இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அவரையே எனக்கு ஜோடியாக்கி விட்டார் என்கிறார்.