'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பெண்களுக்கான தனி நிகழ்ச்சி ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள். இந்த கேம் ஷோவிற்கு அதிர்ஷ்டலட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் அவர்களது திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் 5 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு ஒரு மெகா பரிசும். கலந்து கொள்கிற மற்ற அனைவருக்குமே பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை நீண்ட இடைவெளிக்கு பிறகு அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். திருமணத்திற்கு பிறகு அர்ச்சனா நடத்தும் நிகழ்ச்சி இது. புதன் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.