புஷ்பா 2 - மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் | ஜனவரி 24ல் 6 படங்கள் ரிலீஸ் | தல வந்தால் தள்ளி தான் போகனும் - டிராகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விஜய் கதையில் விஷால்? | தண்டேல் படத்தை தமிழகத்தில் வெளியிடும் பிரபல நிறுவனம்! | ராம் - மிர்ச்சி சிவா படத்தின் தலைப்பு இதுவா? | மார்ச் மாதத்தை குறிவைக்கும் ஜீனி படக்குழு! | குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் தான்: ‛குடும்பஸ்தன்' டிரைலர் விழாவில் மணிகண்டன் பேச்சு | 'வாத்தி' இயக்குனருடன் மீண்டும் கைகோர்ப்பு: அடுத்தடுத்து படங்களை குவிக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: நிறங்கள் மாறி வெளிவந்த “நிறம் மாறாத பூக்கள்” |
சின்னத்திரையில் வானத்தைப் போல, நினைத்தாலே இனிக்கும் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலாமானவர் ப்ரீத்தி குமார். இவர் சினிமா நடிகர் கிஷோர் குமாரை காதலித்து கடந்த 2023ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சீரியல் எதிலும் கமிட்டாகாத ப்ரீத்தி, அண்மையில் ஒளிபரப்பாக ஆரம்பித்த புனிதா தொடரில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ப்ரீத்தி குமார் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த இனிப்பான செய்தியை கிஷோரும் ப்ரீத்தியும் சேர்ந்து பொங்கல் கொண்டாட்டத்துடன் வெளியிட, ரசிகர்கள் உட்பட பலர் தங்கள் வாழ்த்துகளை குவிந்து வருகின்றனர்.