லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஆனந்த ராகம் தொடர் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோயின் கதாபத்திரத்திற்கு அடுத்தப்படியாக, ஹீரோயினின் வாய் பேச முடியாத தங்கை அபியின் கதாபத்திரமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அபி கதாபத்திரத்தில் 750 எபிசோடுகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்வேதா.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ள பதிவில், தன் வாழ்க்கையின் முக்கிய கட்டத்திற்கு வந்திருப்பதாகவும், அதற்காக தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் பதிவிட்டு ஆனந்தராகம் தொடரிலிருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
அண்மையில் தான் ரோஜா 2 தொடரிலும் ஸ்வேதா என்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்குள் அவர் சினிமா கேரியரிலிருந்து முற்றிலும் விலகியுள்ளதாக தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.