ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
2007ம் ஆண்டு வெளியான 'முருகா' படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக். அதன்பிறகு பிடிச்சிருக்கு, கோழிகூவுது, காதல் சொல்ல ஆசை, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், கனிகாபுரம் சந்திப்பு, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். வானம் பார்த்த சீமையிலே, உலா, பிரியமுடன் பிரியா உள்ளிட்ட சில படங்கள் வெளிவரவில்லை.
சினிமா வாய்ப்புகளும், வெற்றிகளும் சரியாக அமையாத இளம் நடிகர்கள் சின்னத்திரைக்கு வருவது புதிதில்லை. அந்த வரிசையில் தற்போது அசோக்கும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். ஜீ தமிழ் டி.வி.யில் மதியம் 1 மணிக்கு, 'மவுனம் பேசியதே' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
அவரவர் விருப்பத்துடன் ஒரு ஜோடிக்கும், பரஸ்பர விருப்பமில்லாமல் ஒரு ஜோடிக்கும் என இரு ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இவர்கள் ஒரே பேருந்தில் பயணிக்க, பேருந்து விபத்தில் சிக்குகிறது. அதில் இரு ஜோடிகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியங்கள்தான் தொடரின் கதை.
அசோக் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு 'ஸ்ரீகிருஷ்ணா' உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.