'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல சின்னத்திரை நடிகை ஜீவிதா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஷூட்டிங்கிறாக மண்டபத்தின் வெளியே ஜீவிதாவின் கார் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது மரத்தின் ஒரு பெரிய கிளை உடைந்து காரின் மேல் விழுந்தது. இதில் காரின் முன்பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக காருக்குள் ஜீவிதாவோ மற்ற எவருமோ இல்லாமல் இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜீவிதா நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. எனினும், தன் அப்பாவிற்காக ஆசை வாங்கிய கார் இப்படியாகிவிட்டதே என்ற தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.