சின்னத்திரை நடிகை சரண்யா துராடி தனக்கு திருமணமான தகவலை வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார். தனது கணவர் ராகுலின் பிறந்தநாள் அன்று தான் தனக்கும் ராகுலுக்கும் திருமணமான விஷயத்தையே முதன்முதலாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். ராகுல் - சரண்யா இருவரும் காதலித்து வந்ததும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனதும் பலருக்கும் தெரிந்திருந்த நிலையில் திருமணத்தை ஏன் யாருக்கும் தெரியாமல் நடத்தினார்கள் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.
இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பதிலளித்த சரண்யா, 'எனது பர்சனல் வாழ்க்கை பர்சனலாக இருக்கட்டும் என்று நினைத்து தான் திருமணமான விஷயத்தை வெளியே சொல்லவில்லை. அது எங்களுக்குள் இருந்தால் போதும். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து கொள்ள விரும்பவில்லை' என்று கூறியிருந்தார்.
அவரது இந்த பதிலுக்கு சிலர் 'அப்புறம் எதுக்கு உங்கள் கணவருக்காக செய்த வரலெட்சுமி பூஜையை சோஷியல் மீடியாவில் பதிவிட்டீர்கள்?' என சுட்டிக்காட்டி கலாய்த்துள்ளனர்.