இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
நடிகை ஸ்வாதி கொண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2வில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து வெப் சீரியஸ், திரைப்படங்கள் என கமிட்டாகி வரும் ஸ்வாதி, அண்மையில் வெளியான மெய்யழகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமியுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள அவர், 'அரவிந்த்சாமியை படப்பிடிப்பு தளத்தில் பார்த்தது சந்தோஷமாக இருந்தது. அவரது கலரை பார்த்து பிரமித்து போய்விட்டேன். அவரை கட்டிப்பிடிக்கும் காட்சியில் மிகவும் பதட்டமாக இருந்தேன். நான் பதட்டப்படுவதை பார்த்த அரவிந்த்சாமி, என்னிடம் இயல்பாக இருங்கள், இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார். அவரை இதற்கு முன்பு நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால், பல வருடம் பழகிய பந்தம் இருப்பது போல் அவர் என்னிடம் நடந்து கொண்டார்' என்று கூறியுள்ளார். ஸ்வாதி கொண்டே தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடரில் நடித்து வருகிறார்.